தென் ஆப்பிரிக்காவிடம் இலங்கை அணி தோற்றதற்கு இதுதான் காரணம்: பயிற்சியாளர் திலன் சமரவீர

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக விளையாடததே தோல்விக்கு காரணம் என்று பயிற்சியாளர் திலன் சமரவீர கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்று கைப்பற்றியதால், இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் தோல்வி குறித்து தற்போதைய பயிற்சியாளராக உள்ள திலன் சமரவீர கூறுகையில், என்னை பொறுத்தவரையில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது.

மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக அணி வீரர் டிக்வெல்ல ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர், அணி தடுமாறியது.

இருப்பினும் திசர பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா சிறப்பாக விளையாடி அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியின் பலம் முதல் 10 ஓவர்கள் வரை மட்டுமே, அதன் பின்னர் குறைந்த அனுபவங்களுடைய பந்து வீச்சாளர்களே அணியில் உள்ளனர்.

ஆனால் நாம் முதல் 9 ஓவர்களுக்குளே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இறுதியில் நாம் 193 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தோம். நாம் 275 முதல் 280 ஓட்டங்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும்.

ஏனெனில் நம்மிடம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், குறித்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் எதிரணியை கட்டுப்படுத்திருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்