யோ-யோ உடற்தகுதி தேர்வில் அதிக தூரம் ஓடிய இங்கிலாந்து வீரர் யார் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அலெஸ்டர் குக், யோ-யோ உடற்தகுதி சோதனையில் அதிக தூரம் ஓடி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. முன்னதாக, யோ-யோ தேர்வு எனும் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்கும் சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனையில், இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் மூன்று கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் ஓடி தனது உடற்தகுதியை நிரூபித்தார். 33 வயதாகும் குக், தற்போதைய இங்கிலாந்து அணியில் அதிக வயதுடைய வீரர் ஆவார்.

யோ-யோ சோதனை தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை விட சிறிது தூரம் அதிகமாக ஓடிய குக், நிற்க முடியாமல் சாய்ந்தார். எனினும், அவரை சக வீரர்கள் உற்சாகப்படுத்தினர். பல ஆண்டுகளாக அலெஸ்டர் குக், மற்ற இங்கிலாந்து வீரர்களை விட அதிக தூரம் ஓடி, அதிக உடற்தகுதி கொண்டவர் என்று தன்னை நிரூபித்து வருகிறார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் யோ-யோ தேர்வில் குறைந்தபட்சம் 19 புள்ளிகள் பெற வேண்டும். ஆனால், இந்தியாவில் 16.1 புள்ளிகள் பெற்றாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்