இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சங்கக்கார!

Report Print Vethu Vethu in கிரிக்கெட்

உலகளாவிய ரீதியில் ரசிகர்களை கொண்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரித்தி மன்தனாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் சந்திப்பின் மூலம் அவரின் கனவு நனவாகி உள்ளது.

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவை சந்திக்க வேண்டும் என்பது ஸ்மிரித்தி மன்தனாவின் நீண்ட நாள் ஆசையாக காணப்பட்டுள்ளது. அந்த கனவு நேற்று நனவாகியுள்ளதாக ஸ்மிரித்தி குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குமார் சங்கக்காரவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“எனது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவதென தெரியவில்லை. இந்த மகிழ்ச்சி எனது வாழ்நாள் முழுவதும் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்