இளையோர் கிரிக்கெட் தொடர்: இலங்கையை வீழ்த்திய இந்தியா

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இரண்டு போட்டிகள் கொண்டு நான்கு நாள் டெஸ்ட் தொடரை, இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது.

கொழும்பில் நடந்த இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்ததாக 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 37.1 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்தியா அணியில் தொடக்க வீரரான அனுஜ் ராவத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்