இங்கிலாந்து வீரருக்கு ஆலோசனை வழங்கிய கோஹ்லி: பாராட்டும் கிரிக்கெட் ஆர்வலர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தின் Essex அணியின் துடுப்பாட்ட வீரருக்கு, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்டம் குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக, இங்கிலாந்தின் கவுண்டி அணியான Essex-வுடன் இந்தியா ஆடிய மூன்று நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், Essex அணியின் துடுப்பாட்ட வீரர் வருண் சோப்ரா, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் துடுப்பாட்டம் குறித்த சந்தேகங்களை கேட்டுள்ளார்.

அதற்கு விராட் கோஹ்லி சில ஆலோசனைகளை அவருக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து வருண் சோப்ரா கூறுகையில்,

‘விராட் கோஹ்லியிடம் பல துடுப்பாட்ட Shots குறித்து விளக்கம் கேட்டேன். அத்துடன் பந்துகளை எப்படி தடுத்து விளையாடுவது என்பது குறித்தும் கேட்டேன். அவர் எனக்கு சில ஆலோசனைகளை கொடுத்தார். இந்தப் போட்டியில் நான் இந்தியாவின் முன்னணி வீரர்களுடன் விளையாடினேன். இது எனக்கு ஒரு சிறந்த அனுபவம்’ என தெரிவித்துள்ளார்.

எதிரணி வீரர் ஒருவருக்கு விராட் கோஹ்லி ஆலோசனைகளை வழங்கியது குறித்து கிரிக்கெட் ஆர்வலர்கள் அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PC-BCCI
Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...