இந்தியா தொடர்: ஷூவை கழட்டிவிட்டு ஓடி கேட்ச் பிடித்த இலங்கை வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
741Shares
741Shares
ibctamil.com

தவான் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க போன போது ஷூவை கழற்றிவிட்டு இலங்கை வீரர் லக்மல் ஓடிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது.

இப்போட்டியில், இலங்கை பவுலர் பெரேரா பந்து வீச்சில், இந்திய துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் ஸ்வீப் ஷாட் அடிக்கப்போக பந்து மேலே எழும்பியது.

இதையடுத்து பந்தை கேட்ச் பிடிக்க இலங்கை வீரர் லக்மல் ஓடினார். அப்போது அவரின் ஷூக்களில் ஒன்று கழன்று ஓடியது.

ஆனால் அதை பொருட்படுத்தாத லக்மல் பந்து மீதே கவனம் செலுத்தி கேட்சை சரியாக பிடித்து அசத்தினார்.

இதை பார்த்த இலங்கை வீரர்கள் அனைவரும் ஜாலியாக கமண்ட் அடித்தபடி சிரித்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்