இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போதை மருந்து சோதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்
243Shares
243Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போதை மருந்து சோதனை நடத்த இந்திய விளையாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சோதனையை போதை மருந்துக்கு எதிரான தேசிய முகமை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடம் போதை மருந்து சோதனை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிவுறுத்துமாறு, போதைக்கு எதிரான பன்னாட்டு முகமை ஐ.சி.சி.க்கு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், போதை மருந்துக்கு எதிரான பன்னாட்டு முகமை கடிதம் எழுதியுள்ளது.

அதன்படி இந்தியாவில் நடக்கும் அனைத்து தொடர்களின் போதும் இந்திய அணி வீரர்களின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை செயலர் ராகுல் பாட்னகர் அறிவுறுத்தியுள்ளார்.

இச்சோதனைக்கு பி.சி.சி.ஐ தடையாக இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என்றும் ராகுல் பாட்னகர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்