நியூசிலாந்து வீரர்களை பந்தாடியது எப்படி? ரகசியத்தை போட்டுடைத்த ஜடேஜா!

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து வீரர்களை எப்படி வீழ்த்தினோம் என்கின்ற ரகசியத்தை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ஜடேஜாவும் தான். இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதில் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது அவர்களை வீழ்த்துவதற்கு அஸ்வினும் தானும் என்ன செய்தோம் என்பதை ஜடேஜா விளக்கியுள்ளார்.

முதல் இன்னி்ங்சில் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. அதனால் பந்தை மெதுவாகவும், வேகமாகவும் கலந்து வீச முயற்சி செய்தோம். உண்மையிலேயே மெதுவான ஆடுகளத்தில் அஸ்வின் மிகவும் சிறப்பு வாய்ந்த பந்து வீச்சாளர்.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தது. இதனால் தானும், அஸ்வினும் விவாதித்தோம். பொதுவாக எப்போதெல்லாம் விக்கெட் விழாமல் இருக்கிறதோ, அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவோம்.

முதல் இன்னிங்சில் எங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தவர் வில்லியம்சன். இதனால் அவர் துடுப்பெடுத்தாடும்போது அவருக்கு ஸ்டம்பிற்கு வலது புறத்தில் இருந்து பந்து வீசவேண்டுமா அல்லது இடது புறத்தில் இருந்து பந்து வீசவேண்டுமா? என்பது பற்றி பேசிக் கொண்டோம்.

இதேபோல் வேகமாக வீச வேண்டுமா? அல்லது மெதுவாக வீசவேண்டுமா? என்பது போன்ற பல திட்டங்கள் குறித்து விவாதித்தோம் என கூறியுள்ளார்.

தாங்கள் திட்டம்தீட்டியது போலவே வில்லியம்சன் அஸ்வின் பந்தில் வீழ்ந்தார் என்றும், 200 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments