இந்தியா அபார வெற்றி! ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த விராட் கோஹ்லி

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, உரி தாக்குதலில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மரியாரை செலுத்தினார். மேலும் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

அசத்தில் வெற்றிக்கு பின் செய்தியார்களை சந்தித்து பேசிய விராட் கோஹ்லி, உரி தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் இரங்கலை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது, இத்தகைய தாக்குதல் உண்ர்வு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.

உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியும்.

இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த மன உளைச்சலை கொடுக்கும். இதற்காக நான் வருந்த முடியுமே தவிர இதற்கான தீர்வு எடுக்கும் அதிகார நிலையில் நான் இல்லை.

ஒரு இந்தியனாக இச்சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. ஒவ்வொரு இந்தியனையும் பாதித்தது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments