வங்கதேச கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக இலங்கை அணியின் சமரவீரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையிலே சமரவீரா துடுப்பாட்ட பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
அடுத்த மாதம் இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான வங்கதேச அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அவர் துடுப்பாட்ட ஆலோசனை வழங்குவார்.
மேலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கார்ட்னி வால்ஷ் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.