அனுஷ்காவுடன் இருக்கும் கோஹ்லி: புகைப்படம் போட்டு அம்பலப்படுத்திய ரசிகர்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அவரது காதலியான நடிகை அனுஷ்காவுடன் இருப்பது ரசிகர் ஒருவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் திருமண விடயத்தில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் விராட் கோஹ்லி அடிக்கடி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை சந்தித்து வருகிறார். அனுஷ்காவும் போட்டிகளில் பங்கேற்கும் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவிக்க மறப்பதில்லை.

சுல்தான் பட வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா ஷாரூக் கானுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பி செக் குடியரசு நாட்டின் தலைநகரான பிராக்கில் நடந்து வருகிறது.

இந்நிலையில் அனுஷ்காவை சந்திக்க கோஹ்லி அங்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது ரசிகர் ஒருவருடன் கோஹ்லி புகைப்படம் எடுத்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த புகைப்படத்தை அனுஷ்கா தான் எடுத்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை பதிவேற்றிய அந்த ரசிகர், ’அழகான இந்த புகைப்படத்தை எடுத்த அனுஷ்காவுக்கு நன்று’ என கூறி கோஹ்லியையும் ரசிகர்களிடம் மாட்டிவிட்டுள்ளார்.

With the new master blaster , thank you #AnushkaSharma for the lovely picture taken by you. :)

A photo posted by henil2626 (@henilrao) on

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments