மீண்டும் அடி வாங்கிய பாகிஸ்தான்: வெற்றிகளை குவிக்கும் இங்கிலாந்து

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 3வது போட்டியில் உலகசாதனை ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்ற இங்கிலாந்து, முதல் 3 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி நேற்று லீட்சில் நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ஓட்டங்கள் சேர்த்தது.

அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் சொதப்ப அணித்தலைவர் அசார் அலி (80), இமாட் வாசிம் (57) மட்டும் அரைசதம் அடித்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில், அடில் ரசித் 3 விக்கெட்டுகளும், ஜோடான், மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் 248 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜாசன் ரோய் (14), ஹால்ஸ் (8) சொதப்பினர். அணித்தலைவர் மோர்கனும் (11) நிலைக்கவில்லை. ஜோ ரூட் (30) ஓரளவு ஓட்டங்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்த போது பென் ஸ்டோக்ஸ் (69), பேர்ஸ்டவ் (61) ஆகியோர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர்.

இதன் பின்னர் கடைசி வரை களத்தில் பொறுமையாக செயல்பட்ட மொயீன் அலி (45) இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார்.

கடைசி நேரத்தில் துடுப்பாட்ட வீரர்களின் நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து 48 ஓவரிலே 6 விக்கெட் இழந்து 252 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 4-0 என கைப்பற்றியுள்ளது. கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒய்ட்-வாஷ் செய்யும் முனைப்பில் இருக்கிறது இங்கிலாந்து.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments