ஹைடனின் திருநெல்வேலி அல்வா செமலே!

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஹைடன் திருநெல்வேலி சென்று அல்வா சாப்பிட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழகம் வந்த ஹைடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்து அது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை கூறிவருகிறார்.

அது போல அல்வாவுக்கு பெயர் போன திருநெல்வேலி சென்று, அங்கு அல்வா பிரபலம் என்பதை அறிந்த ஹைடன் தானும் அல்வா சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து பிரபல கடைக்கு சென்ற ஹைடன், அல்வாவை சமைத்ததுடன் அதை ருசித்தும் மகிழ்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திருநெல்வேலியின் உண்மையான Mr & Ms அல்வா என்று செமலே ஹேஷ்டேக்கில் பதிவு செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments