"இதோ மாண்புமிகு அமைச்சர் வந்துவிட்டார்": ரோஹித் சர்மாவை கிண்டலடித்த ஹர்பஜன் சிங்

Report Print Tony Tony in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், சக வீரரான ரோஹித் சர்மாவை டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதற்காக விசாகப்பட்டினம் வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது ரோஹித் சர்மா அரசியல்வாதி ஓட்டுக் கேட்பது போன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

இதை டுவிட்டரில் பதிவேற்றிய ஹர்பஜன் சிங், "மாண்புமிகு அமைச்சரான ரோஹித் சர்மா விசாகப்பட்டினத்திற்கு வந்துவிட்டார்.

இந்த சமூகத்திற்கு செய்து கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றுவார்“ என்று கிண்டலாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments