'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியது எனக்கே தெரியாது: சொல்கிறார் திசர பெரேரா

Report Print Tony Tony in கிரிக்கெட்
'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியது எனக்கே தெரியாது: சொல்கிறார் திசர பெரேரா

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தனக்கு தெரியாமலே 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியதாக இலங்கை வீரர் திசர பெரேரா கூறியுள்ளார்.

இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் இந்தியா 69 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இதில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடும் போது 19வது ஓவரை திசர பெரேரா வீசினார்.

இந்த ஓவரின் 4வது பந்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 27 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து ரெய்னா அடுத்த பந்தில் 30 ஓட்டங்களில் வெளியேறினார். கடைசி பந்தில் யுவராஜ் சிங் டக்-அவுட்டாக வெளியேறினார்.

இதன் மூலம் திசர பெரேரா ’ஹாட்ரிக்‘ விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். ஆனால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது சக வீரர்கள் கூறிய பிறகே தெரியவந்தது என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து திசர பெரேரா கூறுகையில், நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இது 2வது முறையாகும். இதற்கு முன் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ’ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியுள்ளேன்.

ஆனால் இந்தப் போட்டியில் இது 'ஹாட்ரிக்' விக்கெட் என்று எனக்குத் தெரியாது.

என்னுடைய சக வீரர்கள் நான் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினேன் என்று கூறிய பிறகே எனக்கு தெரியவந்தது.

அந்த சமயத்தில் சிறப்பான வகையில் டெத் ஓவரை எப்படி வீசவேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments