கணினியில் உள்ள தீங்கு பயக்கும் மென்பொருட்களை குரோம் ஊடாக கண்டறிவது எப்படி?

Report Print Givitharan Givitharan in கணணி

கணினிகளுக்கு பெரிதும் தீங்கு பயக்கும் மென்பொருட்களாக மல்வேர்கள் காணப்படுகின்றன.

இவற்றினை கண்டறிவது மிகவும் கடினமாகும்.

எனினும் கூகுள் குரோம் உலாவியின் ஊடாக நிகழ்நிலையில் கண்டறியக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

இதற்கு குரோம் உலாவியினை முதலில் செயற்படுத்த வேண்டும்.

அதன் பின்னர் Settings பகுதிக்கு சென்று Advanced என்பதை தெரிவு செய்யவும்.

இங்கு காணப்படும் Reset and Clean Up என்பதில் உள்ள Clean up computer என்பதை தெரிவு செய்யவும்.

தொடர்ந்து Find என்பதை கிளிக் செய்து சிறிது நேரம் வழங்கவும்.

இப்போது கணினியில் உள்ள மல்வேர்கள் போன்ற தீங்கு பயக்கும் மென்பொருட்களை தேடி பட்டியற்படுத்தும்.

இச் செயற்பாடு நிறைவுற்றதும் Remove என்பதை கிளிக் செய்து கணினியை மீளவும் இயக்கவும்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்