டெக்ஸ்டாப் கணினி அல்லது இணையத்தில் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in கணணி
13Shares

மொபைல்போன்களின் அதிகளவில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் செயலியை டெக்ஸ்டாப், லேப்டொப் மற்றும் இணையம் என்பவற்றில் பயன்படுத்தக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இக் கணினிகளில் விண்டோஸ் 8 அல்லது அதன் பின்னரான பதிப்புக்களிலும், Mac OS X 10.10 அல்லது அதன் பின்னரான பதிப்புக்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன் தரப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாவிடின் நேரடியாக இணைய உலாவியில் வாட்ஸ் ஆப் இணையத்தளத்திற்கு சென்றும் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்த முடியும்.

இவ்விரண்டினையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

இணையத்தளத்தில் அல்லது இணையப் பக்கத்தில் பயன்படுத்துவதற்கு கூகுள் தேடலில் சென்று Whatsapp for Web என தேடல் செய்யவும்.

தேடல் பெறுபேறுகளில் காண்பிக்கப்படும் https://web.whatsapp.com/ எனும் தளத்திற்கு செல்லவும்.

இத் தளத்தில் ஒரு QR Code தென்படும்

பின்னர் கைப்பேசியில் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு சென்று மெனுவில் WhatsApp Web என்பதை கிளிக் செய்யவும்.

இதன்போது மொபைலின் கமெரா அக்டிவேட் ஆகும்.

அவ்வாறு அக்டிவேட் ஆன கமெராவின் உதவியுடன் இணையப் பக்கத்தில் உள்ள QR Code இனை ஸ்கான் செய்யவும்.

இப்போது இணையப்பக்கத்தில் WhatsApp ஆனது பயன்படுத்துவதற்கு தயாராகிவிடும்.

எவ்வாறெனினும் இதில் வீடியோ, ஆடியோ அழைப்பு வசதிகளை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லது https://www.whatsapp.com/download எனும் தளத்திலிருந்து டெக்ஸ்டாப் அல்லது லேப்டொப் கணினிக்கான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கம் செய்து நிறுவிய பின்னர் அப்பிளிக்கேஷனை திறந்து தோன்றும் QR Code இனை மேற்கண்ட முறையில் ஸ்கான் செய்து மொபைல் போனை இணைக்க வேண்டும்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்