விண்டோஸ் மற்றும் ஆப்பிள் கணினிகளுக்கான மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in கணணி

முன்னணி சமூகவலைத்தளமாக பேஸ்புக் விளங்கிவருகின்றது.

இதனை சுமார் 2 பில்லியன் வரையான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை சட் செய்வதற்கான மெசஞ்சர் அப்பிளிக்கேஷனையும் மொபைல் சாதனங்களுக்காக பேஸ்புக் ஏற்கணவே அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது விண்டோஸ் கணினிகள் மற்றும் MacBook கணினிகள் என்பவற்றிற்காக பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் வீடியோ சட் செய்யக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு டெக்ஸ்டாப் இணைய உலாவிகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டெ அவற்றிற்கான அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்