ஆப்பிளின் முதலாவது Macintosh கணினிக்கு வயது 36

Report Print Givitharan Givitharan in கணணி

ஆப்பிள் நிறுவனத்தின் முன்நாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் முதலாவது Macintosh கணினியினை அறிமுகம் செய்திருந்தார்.

இக் கணினி அறிமுகம் செய்யப்பட்டு 36 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

குறித்த கணினியில் Motorola 68000 8MHz processor உள்ளடக்கப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி பிரதான நினைவகமாக 128KB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 3.5 அங்குல அளவுடைய நெகிழ்வட்டினை (Floppy Disk) கொண்டிருந்துள்ளது.

அப்போது இதன் விலையானது 2,495 அமெரிக்க டொலர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி இக் கணினியானது 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்து Ridley Scott எனும் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்