புதிய மைல்கல்லை எட்டியது விண்டோஸ் 10 பாவனை

Report Print Givitharan Givitharan in கணணி

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கதளம் ஏனைய நிறுவனங்களில் இயங்குதளத்தினை விடவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றமை தெரிந்ததே.

இறுதியாக அந்நிறுவனம் விண்டோஸ் 10 பதிப்பினை வெளியிட்டிருந்தது.

இப் பதிப்பானது எந்தவிதமான போட்டியும் இன்றி உலகில் அதிகளவு கணினி சாதனங்களை இலகுவாக ஆக்கிரமித்து வந்தது.

இந்நிலையில் தற்போது சுமார் 900 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் Yusuf Mehdi என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் 800 மில்லியன் சாதங்களை தொட்டிருந்த நிலையில் அதன் பின்னரான 6 மாதங்களில் மேலும் 100 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10 நிறுவப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் 1 பில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10 பயன்படுத்தப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்