ஆப்பிளின் புதிய iOS 13 beta 7 ஐபோனின் மின்கலப் பாவனையை பாதிக்கின்றதா?

Report Print Givitharan Givitharan in கணணி

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் மொபைல் சாதனங்களுக்கான iOS 13 beta 7 எனும் புதிய பதிப்பினை வெளியிட்டிருந்தது.

இப் பதிப்பானது முன்னைய iOS 12.4 பதிப்பினை விடவும் வேகமாக செயற்படுகின்றதா என பரிசோதிக்கப்பட்ட வீடியோ ஒன்று iAppleBytes இனால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் iAppleBytes புதிய iOS 13 beta 7 பதிப்பின் மின்கலப் பாவனை தொடர்பான வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

iPhone 6S, iPhone 7 மற்றும் iPhone 8 என்பவற்றில் iOS 13 beta 7 மற்றும் iOS 12.4 என்பவற்றினை தனித்தனியாக நிறுவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மின்கலப் பாவனையில் பெரிய மாற்றம் காணப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை பீட்டா பதிப்புக்களை வெளியிட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் iPhone 11 உடன் iOS 13 பதிப்பினை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்