கணினி கடவுச் சொல்லை கண்டுபிடித்தவர் மரணம்

Report Print Givitharan Givitharan in கணணி

இன்றைய இணைய உலகில் கடவுச் சொற்களின் பயன்பாடானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

எனினும் இணையப் பாவனைக் காலத்திற்கு முன்னரே கடவுச் சொல் பாவனையானது பயன்பாட்டில் இருந்துள்ளது.

கணினிப் பாதுகாப்பிற்கு என இக் கடவுச்சொல் ஆனது Dr Fernando Corbato என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இவர் தனது 93வது வயதில் தற்போது மரணமடைந்துள்ளார்.

1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் Massachusetts Institute of Technology (MIT) இல் இணைந்தபோதே பயனர்களின் கணக்குகளை கணினியில் பாதுகாப்பதற்காக கடவுச் சொல்லினை அறிமுகம் செய்திருந்தார்.

இவர் கணினி பொறியியலாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஒன்றினையும் 1990 ஆம் ஆண்டில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்