பல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி

Report Print Givitharan Givitharan in கணணி

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அந்நிறுவனம் முதன் முறையாக உருவாக்கிய கணினியானது ஏலம் விடப்பட்டுள்ளது.

இக் கணினியானது பிரித்தானியாவில் உள்ள பிரபல ஏல நிறுவனமான Christie இனால் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி ஏலம் விடப்பட்டுள்ளது.

ஆப்பிள் 1 என அழைக்கப்படும் இக் கணினியானது இறுதியாக 4,71,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் பெறப்பட்டுள்ளது.

இந்திய பெறுமதியில் இத் தொகையானது ஏறத்தாழ 3.2 கோடிகள் ஆகும்.

1976 மற்றும் 1977 ஆண்டு காலப் பகுதியில் குறித்த கணினி வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்