ஆப்பிள் கணினிகளில் வைரஸ் தாக்கத்தை தடுக்க வருகிறது மைக்ரோசொப்ட்டின் மென்பொருள்

Report Print Givitharan Givitharan in கணணி

கணினிகளை வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.

அதேபோன்று விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் கணினிகளை பாதுகாப்பதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் Microsoft Defender எனும் மென்பொருளை அறிமுகம் செய்திருந்தது.

ஏனைய அப்பிளிக்கேஷன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது வைரஸ்களை நீக்கக்கூடிய இந்த மென்பொருளானது மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் கணினிகளிலும் Microsoft Defender மென்பொருள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Microsoft Defender Advanced Threat Protection (ATP) எனும் பெயருடன் குறித்த மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்பதை மைக்ரோசொப்ட் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்