Acer நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய டேப்லட்

Report Print Givitharan Givitharan in கணணி

மொபைல் சாதன உற்பத்தியில் சிறந்துவிளங்கும் Acer நிறுவனம் புத்தம் புதிய அன்ரோயிட் டேப்லட் ஒன்றினை வடிவமைத்துள்ளது.

Acer Iconia One 8 எனும் ந்த டேப்லட் ஆனது அடுத்த மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவிருக்கின்றது.

இதன் திரையானது 8 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடையதாக இருப்பதுடன், MediaTek MT6781A Processor இனை கொண்டுள்ளது.

மேலும் பிரதான நினைவகமாக 1GB RAM, 16GB சேமிப்பு நினைவகம், நீடித்து செயற்படக்கூடிய 4500 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 150 டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்