பொலிசாருடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஒன்லைன் மூலமாக வாடகை வாகன சேவையை வழங்கிவரும் பிரபல நிறுவனமாக ஊபர் திகழ்கின்றது.

இந்நிறுவனம் தற்போது டெல்லி பொலிசாருடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளது.

இதன் மூலம் வாகனம் செலுத்துபவர்கள் பொலிசாரின் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக ஊபர் அப்பிளிக்கேஷன் ஆனது Himmat Plus அப்பிளிக்கேஷனுடன் ஒத்திசைவாக்கம் செய்யப்படுகின்றது.

இதன் மூலம் ஊபர் வாகனங்கள் பயணிக்கும் இடங்களை டெல்லி பொலிசார் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

இவ் வசதி மூலம் ஊபர் பயனாளிகளும் அவசர நிலைமைகளின் போது டெல்லி பொலிசாரின் உதவியினை நாட முடியும்.

இதற்காக ஊபர் அப்பிளிக்கேஷனில் விசேட பொத்தான் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்