சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பணியாற்றும் தமது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியை தொடருமாறு பேஸ்புக் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் மற்றுமொரு அதிரடி முடிவை பேஸ்புக் எடுத்துள்ளது.
இதன்படி சான் பிரான்ஸிஸ்கோவில் இடம்பெறவிருந்த உலக சந்தைப்படுத்தல் மாநாட்டினை நிறுத்தியுள்ளது.
இந்த மாநாடு ஆனது எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்தது.
இதில் சுமார் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்குபெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இதேவேளை பார்ஸிலோனாவில் இடம்பெறவிருந்த மொபைல் வேர்ள்ட் கொங்கிரஸ் நிகழ்வும் கொரோனா வைரஸ் அச்சத்தினால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.