ஏர்டெல் நிறுவனத்துடன் இணையும் கூகுள்: பிரபல நிறுவத்தினை வீழ்த்துவதற்கு ஸ்கெட்ச்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி மின் வணிக நிறுவனமான அமேஷான் கிளவுட் சேவை உட்பட ஏனைய இணைய சேவைகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றது.

இது இணைய ஜாம்பவான் ஆன கூகுளிற்கு மிகவும் சவால் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.

எனவே இந்தியாவில் அமேஷான் நிறுவனத்தினை வீழ்த்துவதற்கு ஏர்டெல் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் கைகோர்க்க தயாராகியுள்ளது.

இதன்படி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான வியாபாரங்களிற்கும் கூகுளின் G Suite சேவையினை ஏர்டெல் நிறுவனம் வழங்கும்.

இவற்றுள் ஜிமெயில், Docs, Drive, Calendar என்பனவும் அடங்கும்.

இதேவேளை இரண்டு மாதத்திற்கு முன்னர் ரிரையன்ஸ் ஜியோ நிறுவனம் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதுடன் எதிர்வரும் 10 வருடங்களுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...