ஆயிரக்கணக்கான பணியாளர்களை அதிரடியாக குறைக்கும் பிரபல தொழில்நுட்ப நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

டெஸ்க்டாப் கணினிகளுடன் மடிக்கணினிகள் மற்றும் ஏனைய கணினி சாதனங்களின் உற்பத்திக்கு பெயர் பெற்ற நிறுவனமாக HP காணப்படுகின்றது.

இந்த நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த பணிக்குறைப்பானது அடுத்து வரும் மூன்று வருடங்களில் படிப்படையாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி சுமார் 16 சதவீதமான பணியாளர்களை வேலையில் இருந்து இடைநிறுத்தவுள்ளது.

இந்த எண்ணிக்கையானது 9,000 ஆகக் காணப்படுகின்றது.

இவ்வாறு பணிக்குறைப்பு செய்வதன் ஊடாக 2022 ஆம் ஆண்டு சுமார் ஒரு பில்லியன் டொலர்களை மீதப்படுத்த அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்