ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்கும் பிரபல நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள், சாம்சுங் என்று உலக அளவில் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் பிரபல்யம் பெற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக வளர்ந்துவரும் ஏனைய நிறுவனங்களுள் Oppo நிறுவனமும் ஒன்றாகும்.

சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம் தென் ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளது.

இந்த நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் அளவினை இரண்டு மடங்கினால் அதிகரிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது மாதம் தோறும் 4 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டு நிறைவில் 100 மில்லியன் கைப்பேசிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்