வட கொரியாவில் இரகசியமாக பணியாற்றிய ஹுவாவி நிறுவனம்: ஆவணங்கள் கசிந்ததால் பரபரப்பு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சீனாவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவி அண்மைக்காலமாக உலகமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதற்கு பிரதான காரணம் அமெரிக்காவினால் வியாபாரக் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டமையாகும்.

இதனை அடுத்து தற்போது மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வட கொரியாவில் வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து ரகசியமான முறையில் வர்லெஸ் வலைமைப்பு நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 8 வருடங்கள் இவ்வாறு ஹுவாவி நிறுவனம் பணியாற்றியுள்ளது.

இதற்கான ஆவண ஆதாரங்களை ஹுவாவியில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் ஒருவர் கசியவிட்டுள்ளார்.

அதில் சீனாவின் மற்றுமொரு தொழில்நுட்ப நிறுவனமான Panda International Information Technology உடன் இணைந்து ஹுவாவி ரகசியமான முறையில் பணியாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்