பிரம்மாண்டமான தொழில்நுட்ப நிறுவனத்தினை வாங்கும் ஆப்பிள்: புதிய பாதையில் பயணிக்க திட்டம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகப் புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக ஆப்பிள் திகழ்கின்றது.

இந்நிறுவனம் தற்போது மற்றுமொரு பிரபல்யமான தொழில்நுட்ப நிறுவனத்தினை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி மொபைல் மற்றும் கணினி போன்ற இலத்திரனியில் சாதனங்களுக்காக சிப்களை தயாரிக்கும் இன்டெல் நிறுவனத்தினையே வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து.

இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தினை வாங்கிவிடும் என தெரிகிறது.

இன்டெல் நிறுவனத்தின் உரிமம் மற்றும் பணியாளர்களை ஒன்றாக சேர்த்து வாங்கவுள்ள ஆப்பிள் நிறுவனம் அதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கும் தயாராக உள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்த பின்னர் தனது மொபைல் சாதனங்களுக்கான 5G வலையமைப்பு சிப்களை ஆப்பிள் நிறுவனம் தானே வடிவமைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்