இந்தியாவில் பிரம்மாண்டமான தரவுச் சேமிப்பகத்தை நிறுவும் வாட்ஸ் ஆப் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது இந்தியாவில் இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவையினை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது பிரம்மாண்டமான தரவுச் சேமிப்பகத்தை (Data Storage) உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவைக்கான தரவுகளை சேமிப்பதற்காகவே இந்த தரவுச் சேமிப்பகம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அரசின் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாகவே இச் சேவையை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இப் பணப்பரிமாற்ற சேவையினை ICIC Bank, Axis Bank, HDFC Bank மற்றும் State Bank என்பவற்றுடன் இணைந்து வழங்குவதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்