ஊபர் நிறுவனத்தின் அடுத்த அதிரடித் திட்டம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலக அளவில் பல நாடுகளில் ஒன்லைன் ஊடாக பதிவு செய்யப்பட்டு விரைவான போக்குவரத்து சேவையை ஊபர் நிறுவனம் வழங்கி வருகின்றது.

இந்நிறுவனமானது குறித்த சேவையுடன் ஊபர் ஈட்ஸ் (Uber Eats) எனும் உணவு டெலிவரி செய்யும் சேவையையும் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ஊபர் நிறுவனத்தின் இவ் இரு சேவைகளும் மிகவும் பிரபல்யமடைந்துள்ள நிலையில் புதிய அதிரடி திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது.

இதன்படி உணவுகளை டெலிவரி செய்வதற்கு ட்ரோன் விமானங்களை பயன்படுத்தவுள்ளது.

எனினும் முதன் முறையாக சான்டிக்கோ பிரதேசத்தில் மாத்திரமே இச் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கடந்த மே மாதம் முதல் இதற்கான பரிசீலிப்புக்கள் இடம்பெற்று வந்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் கோடை காலம் முதல் இச் சேவையினை சான்டிக்கோ மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்