தென்கொரிய நிறுவனம் மீது வழக்கு தொடரும் பேஸ்புக்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் இருந்து பேஸ்புக் நிறுவனம் இன்னும் முழுமையாக மீளவில்லை.

இதற்கிடையில் மற்றுமொரு நிறுவனம் பேஸ்புக் தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் உள்ள Rankwave எனும் நிறுவனமே இவ்வாறு பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் உள்ள டெவெலொப்பர் பிளார்ட்போர்மை பயன்படுத்தியே இந்த தகவல் திருட்டு இடம்பெற்றுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் குறித்த தென்கொரிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

எவ்வாறெனினும் எத்தனை பயனர்களின் தகவல்கள் இவ்வாறு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிடவில்லை.

முன்னர் கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 87 மில்லியன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers