அமேஷான், ஆப்பிளை தொடர்ந்து புதிய மைல்கல்லை எட்டியது மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மென்பொருள் ஜாம்பவான் ஆன மைக்ரோசொப்ட் நிறுவனம் சந்தைப் பெறுமதியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அதாவது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தற்போதைய சந்தைப் பெறுமதி 1 ட்ரில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்த மைல்கல்லை கடந்த வியாழக்கிழமை எட்டியுள்ளது.

இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் மற்றும் அமேஷான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களே இம் மைல்கல்லை எட்டியிருந்தன.

இதேவேளை கடந்த புதன்கிழமை நான்காவது காலாண்டில் மாத்திரம் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வருமானம் 14 சதவீதம் எனும் எதிர்பாராத வளர்ச்சியை எட்டியிருந்தது.

அதாவது 30.6 பில்லியன் டொலர்களாக காணப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்