பகிரங்க மன்னிப்பு கோரியது ஆப்பிள் நிறுவனம்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது தனது மேக்புக் மடிக்கணினியில் புதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்திருந்தது.

Butterfly Keyboard எனப்படும் இது மூன்றாம் தலைமுறைக் கீபோர்ட் ஆகும்.

இக் கீபோர்ட்டினை பயன்படுத்தும் சில பயனர்கள் இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முறையாக கீபோர்ட் இயங்காமை தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனை ஆராய்ந்து பார்த்த ஆப்பிள் நிறுவனம் குறித்த கீபோர்ட்களில் தவறு இருப்பதை கண்டறிந்துள்ளது.

இதனால் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் விரைவில் குறைபாடு நீக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்