சமூகவலைத்தளங்களிடம் மைக்ரோசொப்ட் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ஜ் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 50 பேர் வரை பலியாகியிருந்தனர்.

இத்தாக்குதல் சம்பவமானது தாக்குதல் நடத்தியவரால் பேஸ்புக் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட போதிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதனை அடுத்து சமூகவலைத்தளங்களுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் முக்கிய கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதாவது பயங்கரவாதத்திற்கு எதிராக விரைவாக செயற்படக்கூடிய வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிகாரியான Brad Smith விடுத்துள்ளார்.

இதேவேளை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் மைக்ரொசொப்ட் ஆகிய 4 நிறுவனங்களும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக Global Internet Forum to Counter Terrorism (GIFCT) இணை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்