சூழல் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு அமேஷான் நிறுவனம் எடுக்கும் அதிரடி முடிவு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முன்னணி மின் வர்த்தக தளமாக விளங்கும் அமேஷான் முதன் முறையாக சூழல் பாதுகாப்பு கருதி முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது.

இதன்படி சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை டெலிவரி செய்வதை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக கார்பன் அடங்கிய பொருட்களின் டெலிவரியை நிறுத்தவுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக குறித்த வகை பொருட்கள் டெலிவரி செய்வது படிப்படியாக நிறுத்தப்பட்டு 2030 ஆம் ஆண்டில் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்திற்கு Shipment Zero எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதேபோன்று பேஸ்புக், கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மீளப் புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்களை ஏற்கணவே பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்