கூகுள் மேப்பில் புதிய வசதி: அசத்தும் கூகுள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இடங்களை துல்லியமாக கண்டறிதல் மற்றும் வழிகாட்டுதல் போன்ற பல சேவைகளை கூகுள் மேப் வழங்கிவருகின்றது.

இவற்றுடன் தற்போது புதிதாக ஒரு வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிக்கும் வேக கட்டுப்பாடுகளை இனி கூகுள் மேப்பில் காண முடியும்.

இது பல விபத்துக்களை தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கபடுகின்றது.

அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களிற்காக புதிய கூகுள் மேப் அப்டேட்டில் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எவ்வாறெனினும் தற்போது Denmark, United Kingdom, United States, Australia, Brazil, Canada, India, Indonesia, Mexico, Russia. நாடுகளில் உள்ள வேகக் கட்டுப்பாடுகள் தொடர்பான தகவல்கள் மாத்திரமே கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்