வைரலாகும் #10YearChallenge: பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட கருத்து என்ன தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கடந்த ஒரு சில வாரங்களாக பேஸ்புக் வலைத்தளத்தில் #10YearChallenge எனும் ஹேஸ்டேக் மிகவும் வைரலாகி வருகின்றது.

பலரும் தமது 10 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும் பகிந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் இந்த ஹேஸ்டேக் மூலம் பயனர்களின் புகைப்படங்கள் அனுமதியற்ற முறையில் சேகரிக்கப்படுவதாகவும், இப் புகைப்படங்கள் அனைத்தும் Facial Recognition தொழில்நுட்பத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் பரவிவந்தது.

எனினும் பேஸ்புக் நிறுவனம் தற்போது அதனை மறுத்துள்ளது.

அத்துடன் இது பயனர்களினால் உருவாக்கப்பட்ட ஒரு மீம் எனவும், இதனைப் பயன்படுத்தி பேஸ்புக் நிறுவனம் எந்தவிதமான தகவல் சேகரிப்பிலும் ஈடுபடவில்லை எனவும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது பேஸ்புக் பயனர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்