பயனர்களை உளவு பார்க்க உதவுமாறு கேட்ட சீனா: உறுதியாக மறுத்தார் ஹுவாவி நிறுவுனர்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பிரபல்யமான ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் டேப் வடிவமைப்பு நிறுவனமான ஹுவாவி சீன அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

பயனர்கள் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களின் ஊடாக அவர்களை உளவு பார்க்கும் நடைமுறையை பல்வேறு நாடுகள் பின்பற்றி வருகின்றன.

இதற்கு சில தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்கள் என்பன ஆதரவாக செயற்பட்டு வருகின்றன.

இதேபோன்றே சீன பயனர்களை உளவு பார்க்க ஒத்துழைக்குமாறு ஹுவாவி நிறுவனத்தை சீன அரசு கேட்டுள்ளது.

இதற்கு அந்நிறுவனத்தின் நிறுவுனர் Ren Zhengfei மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சர்வதேச ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர் தனது மகள் Meng Wanzhou தொடர்பில் தான் வருந்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Meng Wanzhou சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers