ஆயிரக்கணக்கான கணக்குகளை முடக்கியது டுவிட்டர் நிறுவனம்: காரணத்தையும் வெளியிட்டது

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பல மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்ட டுவிட்டர் தளமானது தற்போது சற்று இறுக்கமான சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அதிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.

எனினும் கட்டுப்பாடுகளை தாண்டியும் இவ்வாறான விளம்பரங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் அவ்வாறான கணக்குகளை நீக்கி வருகின்றது.

தற்போதுகூட சுமார் 10,000 கணக்குகளை நீக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக் கணக்குகள் அமெரிக்காவில் இடம்பெறும் இடைக்கால தேர்தல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விளம்பரங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாத காலப் பகுதியிலேயே குறித்த கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று கடந்த ஜுலை மாதத்தில் ஒரே நாளில் மாத்திரம் சுமார் 1 மில்லியன் போலிக் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்