கூகுளிலும் வெடித்த மீ டூ விவகாரம்! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்

Report Print Kabilan in நிறுவனம்

உலகம் முழுவதும் மீ டூ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச அளவில் பிரபல நிறுவனமான கூகுளில் பணிபுரியும் பெண்களுக்கு, உயரதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாக 48 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார். இந்நிலையில், உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள், கூகுளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலியல் குற்றம் இழைப்பவர்களுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலக பகுதியில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் வெளிநாடுகளில் பெர்லின், லண்டன், சிங்சப்டர், ஷீரீச், டியூப்ளின், ஐதராபாத், மும்பை ஆகிய முக்கிய நகரங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக பேட்டியளித்த கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஒரு திடமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்