நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய நிலையில் யாகூ நிறுவனம்: எத்தனை மில்லியன் டொலர்கள் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சில வருடங்களுக்கு முன்னர் இணைய உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த நிறுவனமாக யாகூ காணப்படுகின்றது.

எனினும் கூகுளின் வருகைக்கு பின்னர் யாகூ பின்னுக்கு தள்ளப்பட்டது.

எவ்வாறெனும் தனக்கென கோடிக்கணக்கான பயனர்களை தற்போதும் யாகூ கொண்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் சுமார் 200 மில்லியன் வரையான பயனர்களின் தகவல்கள் யாகூ நிறுவனத்திடமிருந்து களவாடப்பட்டிருந்தன.

இப் பயனர்கள் அனைவரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

யாகூ நிறுவனத்தின் தவறாலேயே இவர்களின் தகவல்கள் கசியும் நிலை ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 50 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் என யாகூ நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை யாகூ நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்