மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொலைபேசி இலக்கம்

Report Print Vethu Vethu in சமூகம்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரையில் சுமார் 3 இலட்சம் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் திகதி திணைக்களங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாளஅட்டை விநியோகிக்கப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சில அதிபர்கள் காலம் தாமதித்து மாணவர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்ததனால் அவற்றை உரிய நேரத்தில் வழங்க முடியாமல் போயுள்ளது. சுமார் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் இவ்வாறு காலம் தாழ்த்தி கிடைத்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை செயல்முறைப் பரீட்சை எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை துரிதமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாதாரண தரப் பரீட்சையில் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் இந்தவாரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ண்பித்துள்ள மாணவர்கள் திணைக்கத்திற்கு விஜயம் செய்தும் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார் . இதுவரையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.

அலுவலக நேரங்களில் மாணவர்களுக்காக 0115-226-115 என்ற அவசர தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்