வவுனியாவில் இடம்பெற்ற சுதந்திரவானம் பட்டம் ஏற்றும் நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபை மைதானத்தில் பட்டமேற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவின் அனுசரணையில் சுதந்திர வானம் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பாலகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முதலாவது பட்டத்தினை ஏற்றி வைத்துள்ளார்.

அத்துடன் மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி, கள இயக்க கிளை பிரதம முகாமைத்துவ உதவியாளர் கிருஸ்ணதேவா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தட்சாயினி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பட்டமேற்றும் விளையாட்டு தற்போது அழிவடைந்துக் கொண்டு வரும் நிலையில் சிறுவர்கள் மூலம் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாகவே இந்த பட்டமேற்றும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்