ஈஸ்டர் தாக்குதல் மற்றும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை

Report Print Kumar in சமூகம்

இலங்கையினை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுதாக்குதலில் உயிர்நீர்த்தவர்கள், முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த பொதுமக்கள் ஆகியோரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் உயிரிழந்த உறவுகளுக்கு மன அமைதியை வழங்கவேண்டும் என்றும் விசேட திருப்பலி இன்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த உயிர்ந்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாரியின் குண்டு தாக்குதலில் 29பேர் உயிரிழந்ததுடன் 74பேர் படுகாயமடைந்திருந்தனர்.

உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இந்த ஒளிச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது. நாளை மறுதினம் குறித்த தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதகாலத்தினை பூர்த்திசெய்யவுள்ள நிலையில் இந்த விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை பிரைனர் செலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலய முன்றிலில் உயிர்நீர்த்தவர்களுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அச்ச நிலமை போக்கப்பட்டு நாட்டில் நீடித்த சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் எனவும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

கடந்த உயிர்ந்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாரியின் குண்டு தாக்குதலில் 29பேர் உயிரிழந்ததுடன் 74பேர் படுகாயமடைந்திருந்தனர்.

உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இந்த ஒளிச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது. நாளை மறுதினம் குறித்த தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதகாலத்தினை பூர்த்திசெய்யவுள்ள நிலையில் இந்த விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதேபோன்று இனஅழிப்பு செய்யப்பட்ட 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தி வேண்டியும் பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்