வாகனங்களை பிரதேச ரீதியாக அடையாளங்கண்டு கொள்வதற்காக ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு

Report Print Navoj in சமூகம்

மட்டகளப்பு - ஓட்டமாவடியில் வாகனங்களை பிரதேச ரீதியாக அடையாளங்கண்டு கொள்வதற்காக ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வான், முச்சக்கர வண்டிகளுக்கு குறித்த பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வெளிப்பிரதேசங்களுக்குச் செல்லும் வாகனங்களை பாதுகாப்புப்பிரிவினர் அடையாளங்கண்டு கொள்ளும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்திட்டமானது குறித்த பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, பிரதேச சபைச்செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர், நிருவாக வருமான வரி உத்தியோகத்தர்கள், வான், முச்சக்கர வண்டிச் சங்கங்களின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்