உயிர்நீத்த உறவுகளுக்காக கொட்டாஞ்சேனையில் விஷேட பிரார்த்தனை

Report Print Sinan in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக விஷேட பிரார்த்தனை கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டியும், காயமுற்று சிகிச்சைபெற்று வரும் அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டியும் நினைவுச் சுடரேற்றி பிரார்த்தனை நடைபெற்றது.

கடந்த 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது மும்மத சமய குருமார்கள்,பொது மக்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்